[8:58 AM, 3/5/2023] Aram Krishnan: நண்பர்களுக்கு வணக்கம்
இந்த குழுவின் நோக்கம்
இந்த வருடம் ஜூலை மாதம் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நடைப்பெற இருக்கும் தமிழ் நாடு "தொல்லியல் கழகத்தின் 31 ஆவது கருத்தரங்கம் மற்றும் 33 ஆவது ஆவணம் இதழ் வெளியீட்டு விழா
சிறப்பாக நடைப்பெறுவதற்காக அமைக்கப்பட்டுள்ள ஆவண விழா குழுவாகும்
இந்த குழுவில் விழா சம்பந்தமான நிகழ்வுகள் பற்றிய தகவல்களை மட்டும் பகிர்வு செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்
Rtn அறம்கிருஷ்ணன்
உள்ளூர் செயளர் ஆவணம் விழா
[9:19 AM, 3/5/2023] His Aram Krishanan: நண்பர்களுக்கு வணக்கம்
தமிழ் நாடு "தொல்லியல் கழகத்தின் 31 ஆவது கருத்தரங்கம் மற்றும் 33ஆவது ஆவணம் இதழ் வெளியீட்டு விழா வரும் ஜூலை மாதம் 15 மற்றும் 16 ஆகிய இரு நாட்கள் நடைப்பெற இருக்கிறது
இதற்கான ஆலோசனை கூட்டம் இன்று (05.03.23) சுவாதி பள்ளியில் நடைப்பெற்றது
அன்புடையீர் வணக்கம்.
இன்று 05-03-2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 3:00 மணியளவில் ஓசூர் சுவாதி பள்ளியில் நடைபெற்ற அறம் வரலாற்று ஆய்வு மையம் மற்றும் தமிழ்நாடு தொல்லியல் கழகம் இணைந்து நடத்தும் தொல்லியல் மாநாடு -2023.(ஜுலை 14, 15 ஆகிய தேதிகளில்) பற்றிய ஆலோசனை கூட்டம்
தொல்லியல் ஆய்வாளர் திரு அறம் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பல்வேறு அமைப்புகளில் இருந்து
கலந்து கொண்டார்கள்.
திரு அறம் கிருஷ்ணன் அவர்கள் பேசுகையில்
இந்த மாநாட்டின் முக்கிய நோக்கங்கள் இரண்டு : 1) ஆவணம் நூல் வெளியீட்டு.
2) ஆவண கருத்தரங்கம்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தான் அதிகபடியான கல்வெட்டுகள், நடுகற்கள், பாறைஓவியங்கள், பழங்கால கோயில்கள்.
போன்ற பழங்கால தொன்மைகள் உள்ளன.
இதை தமிழ்நாட்டிற்கு தெரியபடுத்தும் வகையில் மாநாடு நடத்தபட இங்கு முடிவு செய்யப்பட்டது.
விழாவில் பங்கேற்ற அனைவரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டார்கள்.
மாநாடு மேலும் இணைந்து பங்கு பெற
ஒப்புதல் பெறப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆவண குழு.
ஓசூர் மக்கள் சங்கம்.
ரோட்டரி கிளப் ஆப் ஓசூர் எலைட் சங்கம்.
மேலும் தலைவர் அவர்கள் பேசுகையில்
மாநாட்டிற்காண செலவினங்கள் மற்றும்
ஏற்பாடுகள் பற்றி விளக்கமாகவும், சிறப்பு விருந்தினர்கள் அழைப்பதை பற்றியும் மாநாட்டிற்கு விழா குழுக்கள் அமைப்பது பற்றியும் பேசினார்.
கல்வெட்டுயில் பயிற்சி வகுப்புகள் 12,13,14-07-2023 ஆகிய மூன்று நாட்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்
நடத்து என முடிவு செய்யப்பட்டது.
ஒருங்கிணைப்பாளர்களாக
முனைவர் க. வெங்கடேசன் அவர்கள்
திருமதி ம. ஜெயலட்சுமி அவர்கள் (கல்வெட்டியல்)
மாநாட்டிற்காண உணவு
ஏற்பாடு :
ரோட்டரி கிளப் ஆப் ஓசூர் எலைட் சங்கம்.
மாநாட்டிற்காண பதிவு செய்தல் / உள் அரங்கு, வெளிபுற பேனார்ஸ் போன்றவற்றை ஏற்பாடு
கிருஷ்ணகிரி மாவட்ட ஆவணக்குழு.
மூன்று மணி நேர சுற்றுலா பயண வசதிகள் செய்தல்.
ஓசூர் மக்கள் சங்கம்.
போன்ற சில முக்கியமானவற்றை ஆலோசனை மூலம் தெரிவித்தார்கள்.
ஆலோசனை கூட்டத்தில் சுமார் 25 நபர்கள் கலந்து கொண்டார்கள்.
இறுதியாக தேனீர் /காரம்வழங்கப்பட்டது.
கவிஞர்.அ.க.இராசு
நன்றி கூற கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது.
அன்புடன்...
அறம் கிருஷ்ணன்.
தலைவர் - அறம் வரலாற்று ஆய்வு மையம் -ஓசூர்.
உள்ளூர் செயளர் ஆவணம் விழா குழு
No comments:
Post a Comment