Monday 3 January 2022

மயிலாடும்பாறை அகழ்வாய்வு -கிருஷ்ணகிரி மாவட்டம் -வீடியோக்கள்


 மயிலாடும் பாறை:-

#தொகரப்பள்ளி #மயிலாடும்பாறை #அகழ்வாய்வு - கல்வட்டம்ஆய்வு –

களப்பயணத்தில்கிருஷ்ணகிரிவரலாற்றுஆய்வுக்குழுவுடன்பர்கூர்சட்டமன்றஉறுப்பினர்  -ஒருகல்வட்டத்தில்இருப்பதுஎன்ன? உங்களுக்காக

https://youtu.be/zl7xVSK1rmk

 

 

 

கல்வட்டதின் நடுவில் இருக்கும்கல் திட்டையின்மேல் உள்ளகற் பலகை எடுக்கப்பட்டு அடியில் உள்ளகல் திட்டை அகழ்வாய்வு செய்யப்பட்ட பின் எப்படி இருக்கும் என்பதை இதைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம். #மயிலாடும்பாறை #MayilaadumPaarai 

https://youtu.be/Mzwk3dNbxBw




#மயிலாடும்பாறை 


 ..நமதுமாவட்டவரலாற்றினைஎத்தனைவருடங்களுக்குபின்னோக்கிஎடுத்துச்செல்லும்எனஆய்வுமுடிவுகள்தெரிவிக்கும்அப்படிப்பட்டஇடத்திற்குவரலாற்றுஆயவுக்குழுவுடன்நமதுபர்கூர்மாண்புமிகுசட்டமன்றஉறுப்பினர்அனைத்துஅகழ்வாய்வுகுழிகளையும்பார்வையிட்டார்#MayilaadumPaarai 

https://youtu.be/UfY3x1FHYHo

 #பெரியபனகமுட்லு உயர்நிலைப்பள்ளியில் #உலகமரபுவாரத்தை முன்னிட்டு நடைபெற்ற

#பெரியபனகமுட்லு மாணவர்களுக்கு #மயிலாடும்பாறை #அகழ்வாய்வு பகுதியில் அரிதான #இரும்புஉருக்குஉலை மாணவர்களுக்கு காட்டி விளக்கம் அளிக்கப்பட்டது -தொல்லியல் அலுவலர் பரந்தாமன் அவர்கள்

https://youtu.be/gHKeRpI73eE



 

 

#மயிலாடும்பாறை #MayilaadumPaarai அகழ்வாய்வுஇடத்தில்கிடைத்தபொருட்களைமாண்புமிகுசட்டமன்றஉறுப்பினர்திரு. தே .மதியழகன்அவர்கள் பார்வையிட்டார். அவற்றினைப்பற்றி மயிலாடும்பாறை அகழாய்வு இயக்குனர் சக்திவேல், கிருஷ்ணகிரி அரசுஅருங்காட்சியககாப்பாட்சியர் கோவிந்தராஜ், தொல்லியல் அகழாய்வு அலுவலர் பரந்தாமன் ஆகியோரிடம்கேட்டறிந்தார்.

https://youtu.be/bC63TqmUU84

 

 

#மயிலாடும்பாறை #MayilaadumPaarai அகழ்வாய்வுக்கு 1.5 கிலோமீட்டர்  தொலைவுக்குள்வரும்  பாறை  ஓவியத்தொகுதி இப்பகுதியின் பழமையை உறுதிபடுத்துகின்றது

https://youtu.be/m75YH-mcfoo

 

 

வீரம்செரிந்தமண்ணா? #தொகரப்பள்ளி #மயிலாடும்பாறை #அகழ்வாய்வில் நான்குகத்திக்துண்டுகள்ஒரேகல்திட்டையில்

1980 மற்றும் 2003ன் முந்தயஅகழ்வாய்வுகளைவிடஅதிகசான்றுகள்கண்டிப்பாககிடைக்கும்அது கிருஷ்ணகிரியின் வரலாற்று பார்வையை மாற்றும் என்பது ஐயமில்லை .கத்திகளும் கல்திட்டையும் மிகஅருகாமையில் எடுக்கப்பட்ட காணொலி உங்கள் பார்வைக்கு

https://youtu.be/_GEBfQWGxs8

 

 

கல்திட்டையில்கல் அவன்பயன்படுத்திய பொருட்களை சட்டியில் இட்டுவைத்தார்களா உங்கள்பார்வைக்கு தற்போது அகழ்வாய்வுசெய்யும் இடத்தில்இருந்து.

https://youtu.be/OCGLuUtKeKs

#மயிலாடும்பாறை கல்வட்டம்பெரும்பாலும் நாம்பார்க்கும் கல்வட்டம் முழுமையாக இருந்தாலும் செடிகள்வளர்ந்து அதன் அமைப்பைகாண இயலாதுதற்போது அகழ்வாய்வுசெய்து வரும் இடத்தில் கல்வட்டம் தெளிவாக்தெரிகிறது உங்களுக்காக

https://youtu.be/q1uoErxuEaI


#மயிலாடும்பாறை 

மயிலாடும் பாறை என்ற பகுதி கிருட்ணகிரி வட்டத்தில் தொகரப் பள்ளியிலிருந்து 3 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இப்பகுதி மூன்று பக்கங்களில் மலைகள் தெற்கு பகுதியில் மட்டும் சமவெளியாகவும் உள்ளது. சுமார் 40 ஹெக்ட்டேர் பரப்பு சமவெளியான இப்பகுதியில் 5 குழிகளும், பெருங்கற்கால சின்னம் ஒன்றும் அகழ்வாய்வு செய்யப்பட்டன.


நுண்கற்காலம்:-


கூச்சு என்ற பெரிய குன்றின் அடிவாரத்தில் தங்குவதற்கு ஏற்றாற்போன்று தாழ்வான பகுதி உள்ளது. இங்கு அகழாய்வுக்குழி ஒன்று போடப்பட்டது. இக்குழி 1.25 மீட்டர் வரை சென்றது. இதில் ஒரு மீட்டர் ஆழம் வரை நுண்கற்காலக் கருவிகள் கிடைத்துள்ளன. கத்திகள், புல்லாங்குழலை ஒத்த மூலக்கற்கள், இரண்டாவது முறையாகக் கூர்மையாக்கப்பட்ட கத்திகள் போன்றன கிடைத்துள்ளன. கத்திகள் 10 முதல் 20 செ.மீ. நீளமும் 2.10 செ.மீ அகலமும் 2 முதல் 4 செ.மீ தடிமனும் உடையன. 20 செ.மீ நீளமுள்ள கருவிகளும் கூர்முனைகள் அதிகமுள்ள கருவிகளும் கிடைத்துள்ளன. இரண்டாவது முறை கூர்மை ஆக்கப்பட்ட கூர்முனை கருவிகளும் கிடைத்துள்ளன. இக்கருவிகளை செய்ய இரண்டு வகையான கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 1. குவார்ட்ஸ் (Quartzite), 2. செர்ட் (Chart) இதில் குவார்ட்ஸ் வகைக் கருவிகள் அதிக அளவில் காணப்படுகின்றன.


இக்கருவிகளுடன் மட்கலங்களின் ஓடுகள் கிடைக்கவில்லை. எலும்புகள் மட்டும் கிடைத்துள்ளன. மற்ற தொல் பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. இங்கு நுண் கற்கால மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பது தெளிவாகின்றது.


புதிய கற்காலம்:-


புதிய கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் இரண்டு. குழிகளில் கிடைத்துள்ளன. சானரப்பள்ளி மலையின் மேல்பகுதியிலுள்ள குகை போன்ற அமைப்புடைய பாறையின் கீழ்ப்பகுதியில் செய்த அகழ்வாய்வில் கீறல் குறியீடுகளும் காணப்படுகின்றன. மனிதன், முக்கோணம் போன்ற உருவங்கள் கீறல் குறியீடுகளாகக் காணப்படுகின்றன.


மலையின் அடிவாரத்தில் கருவாட்டுப் பள்ளம் என்ற இடத்தில் செய்யப்பட்ட அகழாய்வு குழியின் கீழ்ப்பகுதியில், புதிய கற்கால மக்கள் பயன்படுத்திய பொருட்கள் கிடைத்துள்ளன. ஆனால் இங்கு கிடைத்த பானை ஓடுகள் மலையின் மேல்பகுதி வாழ்விடங்களில் கிடைத்த பானை ஓடுகளை விட நேர்த்தியாகக் காணப்படுகின்றன. எனவே புதிய கற்கால மக்கள் மலைப்பகுதிகளில் இருந்து பின்னர் சமவெளிப் பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளனர் என்பது தெரிய வருகின்றது.


கல்வட்டங்கள்:-


மூன்று மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பில் பெருங்கற்கால மக்களின் ஈமச்சின்னங்கள் பரந்து காணப்படுகின்றன. சுமார் 1000 கல்வட்டங்கள் உள்ள இப்பகுதியில் பல சிதைந்துள்ளன. இவற்றில் நல்ல நிலையிலுள்ள கல்வட்டம் ஒன்று அகழ்வாய்வு செய்யப்பட்டது. தரையில் குழியை வெட்டி நான்கு பக்கங்களிலும் நான்கு கற்பலகைகளை வைத்து அதன் மேல் பெரிய கற்பலகை ஒன்றை வைத்து மூடப்பட்டுள்ளது. இந்த கல்லறை சதுரமாக உள்ளது. கற்பலகைகள் கரடு முரடாகக் காணப்படுகின்றன. இயற்கையாகக் கிடைத்த பலகைக் கற்கள் இதில் உள்ளன. மேற்கு பக்கமுள்ள கற்பலகையில் "ப" வடிவம் போன்று இடுதுளை ஒன்று காணப்படுகின்றது. இந்த அமைப்பு ஒழுங்கான அமைப்பு முறையில் இல்லை.


இக்கல்லறையில் கருப்பு சிவப்பு மட்கலங்கள், இரும்பு அம்புமுனைகள், கத்தி, கோடாரி போன்ற இரும்புக் கருவிகள் கிடைத்துள்ளன. இக்கல்லறையைச் சுற்றிலும் பெரிய கற்களைக் கொண்டு அமைக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றும் காணப்படுகின்றது.


வரலாற்றுக் காலம்:-


பெருங்கற்காலத்தைத் தொடர்ந்து வரலாற்றுக் கால மக்கள் வாழ்ந்ததற்கான தடையங்கள் கிடைக்கின்றன. இக்காலத்தில் கீறல் குறியீடுகள் பொறித்த பானை ஓடுகளும், தமிழ் பிராமி எழுத்து கொண்ட ஓடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் ச,த என்ற இரு எழுத்துக்கள் கிடைத்துள்ளன. மற்றொரு எழுத்து அசோகன் பிராமியைப் போன்று காணப்படுகின்றது.


பாறை ஓவியங்கள்:-


நெகுல்சுனை என்ற இடத்தில் உள்ள பாறையில் இரண்டு வகையான ஓவியங்கள் உள்ளன. ஒன்று சிவப்பு நிறத்திலும் மற்றொன்று வெள்ளை நிறத்திலும் உள்ளன. சிவப்பு நிற ஓவியங்கள் முதலில் தீட்டப்பட்டுள்ளன. அதன் மேல் பிற்காலத்தில் வெள்ளை வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இவற்றில் கோட்டுருவங்கள் முக்கோண அமைப்புடைய உருவங்கள் போன்ற இரண்டு வகையான ஓவியங்கள் காணப்படுகின்றன. இதைப் போன்ற ஓவியங்கள் கிருட்ணகிரி பகுதியிலுள்ள கல்திட்டைகளில் காணப்படுகின்றன. கல்திட்டைகளில் உள்ளவை முழுவதும் வெள்ளை நிறத்தில் தீட்டப்பட்டுள்ளன. வெள்ளை நிறம் பெருங்கற்காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது தெரிய வருகின்றது. சிவப்பு நிறம் புதிய கற்காலத்தில் தீட்டப்பட்டுள்ளது.


மயிலாடும் பாறையில் இதுவரை செய்யப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் கீழ்க்கண்ட முடிவுகளுக்கு வர முடிகின்றது.


1. மயிலாடும்பாறையில் நுண்கற்காலம் முதல் புதிய கற்காலம், பெருங்கற்காலம், வரலாற்றுக் காலம் என்று தொடர்ச்சியான பண்பாட்டுக் கூறுகள் காணப்படுகின்றன. புதிய கற்கால மக்களின் வளர்ச்சி நிலைகள் மலையின் மேல் பகுதியிலும், சமவெளிப்பகுதியிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனவே இங்கு படிப்படியான வளர்ச்சி அமைந்துள்ளது.


2. பெருங்கற்கால சின்னங்களில் இயற்கையாகக் கிடைத்த கற்பலகையைக் கொண்டு கல்லறைகள், வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முறையில் வளர்ச்சியடைந்த கல்வட்டங்களும் காணப்படுகின்றன.


3. கல்லறைகளில் பலகைக் கற்கள் நேராக நிற்க குழியின் கீழ்ப்பகுதியில் உருண்டைக் கற்களைப் பயன்படுத்தி உள்ளனர். இதன் வளர்ச்சி நிலையாக சிலவற்றில் துணை சுவர்கள் (Buttress wall) எடுத்துள்ளனர். இதுவும் கல்லறையின் வளர்ச்சி நிலையாகும்.


4. தக்காண பீடபூமியின் தொடர்ச்சி தருமபுரி பகுதிவரை உள்ளது. கர்நாடகம், ஆந்திர மாநிலங்களைப் போன்று இங்கும் கற்கால வளர்ச்சி நிலைகள் காணப்படுகின்றன. எனவே இப்பகுதியை தக்காண பீடபூமியின் தொடர்ச்சியாகவே கொள்ளலாம்.


5. பெருங்கற்காலத்தின் வளர்ச்சி நிலையான நடுகற்கள் தருமபுரி, வட, தென் ஆர்க்காடு பகுதிகளில் காணப்படுகின்றன. காலத்தால் முற்பட்ட நடுகற்கள் தருமபுரியில் கிடைத்துள்ளன. கர்நாடகம் ஆந்திர மாநிலங்களிலும் நடுகற்கள் தமிழகத்தை விட அதிக அளவில் கிடைத்துள்ளன. ஆனால் இவை காலத்தில் பிற்பட்டவை. கி.பி.4 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த நடுகல் தருமபுரியில் கிடைக்கின்றது. எனவே கற்கால மக்களின் வளர்ச்சி நிலை தருமபுரி கர்நாடகத்தைப் போன்றே அமைந்துள்ளது. சன்னியாசிக் கற்கள் எனப்படும். கால்நடை வளர்ப்பு சமுதாயத்தினர் பயன்படுத்திய கற்கள் இப்பகுதியில் மட்டும் கிடைத்துள்ளன என்பது கள ஆய்விலிருந்த வெளிவந்த தகவல்.


6. பையம்பள்ளி அகழாய்வில் புதிய கற்காலம் முதல் பெருங்கற்காலம் வரை தொடர்ந்து வளர்ச்சி நிலைகள் காணப்படுகின்றன. புதியகற்காலக் கருவிகள் அதிக அளவில் கிடைத்துள்ளன. கையால் செய்யப்பட்ட பானை ஓடுகளைத் தொடர்ந்து சக்கரத்தால் செய்யப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இதில் இடைவெளி இன்றி வளர்ச்சி நிலைகள் உள்ளன.


7. ஈமச் சின்னங்களின் அமைப்பில் கரடுமுரடான கற்களைக் கொண்டு கல்லறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இடுதுளை "ப" வடிவத்திலும் வட்டவடிவிலும் கற்பலகையின் மேல்பகுதியிலும் கீழ்ப்பகுதியிலும் காணப்படுகின்றன. இவை முற்கால நிலை என்பது ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்று.


8. தருமபுரி பகுதியில் முல்லிக்காடு, கப்பல்வாடி, சந்தாபுரம், கொல்லப்பள்ளி, பன்னிமடுவு, தையல்மலை ஆகிய இடங்களில் புதிய கற்காலம், பெருங்கற்காலங்களின் வளர்ச்சி நிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை பையம் பள்ளி மற்றும் மயிலாடும் பாறை ஆகிய அகழாய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.


எனவே கர்நாடகத்தைப் போன்று நுண் கற்காலத்திலிருந்து பெருங்கற்காலம் வரை வளர்ச்சி நிலைகள் காணப்படுகின்றன. இப்பகுதியின் இயற்கை சூழ்நிலைகளுக்கு ஏற்ற வகையில் சிலமாற்றங்களுடன் வளர்ச்சி நிலைகள் உள்ளன. கர்நாடகத்தில் பல இடங்களில் அகழாய்வு மேற்கொண்டுள்ளனர். ஆனால் தமிழகத்தில் சில இடங்களில் செய்யப்பட்டுள்ளன எனவே கர்நாடகத்தைப் போன்று இங்கும் கற்கால மக்கள் இருந்தனர் என்பதைக் கொண்டு கீழ்க்கண்டவாறு காலத்தை மாற்றி அமைக்கலாம்.


1. புதிய கற்காலம் கி.மு. 3000 - கி.மு. 1000

2. பெருங்கற்காலம் கி.மு. 1000 - கி.மு. 300


இதுவரை செய்த அகழாய்வுகளின் அடிப்படையில் இம்முடிவு கொடுக்கப்பட்டுள்ளது. இதை உறுதிப்படுத்த அகழ்வாய்வுகள். மேற்பரப்பாய்வுகள் மேலும் தேவை என்றாலும், மயிலாடும்பாறை அகழ்வாய்வு தமிழகத்தின் பெருங்கற்காலத்தை கி.பி. 100 லிருந்து சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நிலைக்கு கொண்டு செல்லலாம் என்ற கருத்தை உறுதியாக முன்வைக்கத்தக்க ஆதாரமாக அமைகிறது. சங்க காலம் கி.மு. 1000 என்ற ஆண்டு தொடக்கம் இரண்டாயிரம் ஆண்டுகள் என்பதிலிருந்து மூவாயிரம் ஆண்டுகள் என உறுதிப்படும். இதனை உறுதிப்படுத்துவதற்கான தொல்லியல் அகழ்வாய்வுகள் மேலும் நடத்தப்பட வேண்டியுள்ளது. அதன் பிறகே அறிவியல்பூர்வமாக இந்தப் புதிய மதிப்பீட்டை உறுதி செய்ய முடியும். தமிழரின் தொன்மையை அகழ்வாய்வு மூலம் கண்டறியும் பணியில் மயிலாடும் பாறை அகழ்வாய்வு ஒரு முக்கியமான கட்டத்தைத் துவக்கி வைக்கிறது.



Saturday 1 January 2022

காணாமல்போன கிருஷ்ணகிரி -ரயில்வே -பர்கூர் ரயில்வே ஸ்டேசன் 7 பகுதிகள் தொகுதி 1

 


காணாமல்போன கிருஷ்ணகிரி -ரயில்வே -பர்கூர் ரயில்வே ஸ்டேசன் 7 பகுதிகள் தொகுதி 1


பகுதி 1 MADEPALLI RAILWAY BRIDGE BARGUR RAILWAY QUARTERS

https://youtu.be/-mxjvoYMAU8

பர்கூர் ரயில் பாலம்-கிருஷ்ணகிரிக்கு வந்துபோன ரயில்வண்டி

பகுதி 2 https://youtu.be/noo_Rb30yh4

பர்கூர் ரயில்நிலையத்தில் ரயிலுக்கு நீரேற்றும் குழாய்

பகுதி 3 https://youtu.be/i43bG8sAOnM.

 

பகுதி 4 பர்கூர்ரயில்வேஸ்டேசன் .

https://youtu.be/F7fsEesqXRE

 

பர்கூர் ரயில்வே குடியிருப்பு -கிருஷ்ணகிரிக்கு வந்துபோன ரயில்வண்டி

 

பகுதி -5 https://youtu.be/qN-VlzyGpbw    ˆ

                                                       

பர்கூர் -மாதேப்ள்ளி மூன்றுகண் ரயில் பாலம் கிருஷ்ணகிரிக்கு வந்துபோன ரயில்வண்டி

பகுதி 6 https://youtu.be/0GSRZRMRWyo

விரைவில் அடுத்த தொகுதி 




எலத்தகிரி 2018