Thursday, 8 April 2021

 










பெருமுகைப்பற்று  இருந்த இடம் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு மற்றும் அருங்காட்சியக காப்பாச்சியர் கோவிந்ராஜ் ,நாராணனமூர்த்தி  மற்றும் கோவிந்தசாமி அவர்கள் கூறிய இடத்தில் தட்டக்கல் மலையை ஆய்வு செய்தது

கல்வெட்டுகளில் பெருமுகைப்பற்றி பல்வேறு கருத்துக்கள் நிலவிவரும் நிலையில் அந்த பெருமுகைப்பற்று இருந்த இடம் தட்டக்கல் மலைகளின் நடுவே உள்ள சுனை அருகே கண்டுபிடிக்கப்பட்டது வரும் இடம் கண்டுபிடிப்பு.

காலம்:  கி.பி 13 ம் நூற்றாண்டு

செய்தி:  இந்த பெருமுகையில் பைரவர் கற்சிலையை செய்து எழுந்தருளிவித்து சுனை ஒன்றையும் செப்பனிட்டு இத்தெய்வத்தின் திருப்படிமாற்றுக்காக (இறைவனுக்கு படைக்கும் அரிசி முதலிய பொருட்களுக்காக) உதப்பிக்குட்டை என்னும் ஏரியை மான்வேலி என்னும் ஊரைச் சேர்ந்த பல்லவரையனான மலையன் என்பவன் தானமளித்த செய்தியை தெரிவிக்கிறது. இவர் செய்தளித்த பைரவர் சிற்பமானது இன்றும் பைரப்பன்கோயிலில் வழிபாட்டில் உள்ளது. இக்கல்வெட்டின் இடது மேற்புறம் பசுவும் கன்றும் கோட்டுருவமாக வரையப்பட்டுள்ளது.

பெருமுகை என்ற பெயர் இப்பகுதியில் கிடைத்த கி.பி.8ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்களில் காணப்பட்டாலும் பெருமுகை எந்த இடத்தைக் குறிக்கிறது என்பது தெரியாமல் இருந்தது. இக்கல்வெட்டில்தான் இப்பெருமுகையில் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தட்டக்கல் மலையே அக்காலத்தில் பெருமுகை என அழைக்கப்பட்டது உறுதியாகிறது. இம்மலையை வடக்கிலிருந்து பார்த்தால் ஒரு பூவின் மொட்டுபோல் இருப்பதைக் காணலாம். அருகில் உள்ள பெரியமலையும் மொட்டு போலவே தோற்றமளிக்கிறது. முகை என்பது மொட்டைக் குறிக்கும். பெரிய மொட்டு போன்ற மலைகளைக் கொண்ட காரணத்தால் இப்பகுதியானது பெருமுகை என அழைக்கப்பட்டிருக்கவேண்டும்.    

அதியான்களைப்போன்று மலையமான்களும் சங்க காலத்திலிருந்து ஆண்டுவந்த குறுநில மன்னராவார்கள். இவர்கள் திருக்கோயிலூர் பகுதியை ஆண்டதாக சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. இராசராசனின் தாயான வானவன் மாதேவியும் மலையமான் குலத்தைச் சேர்ந்தவராவார். இவர்கள் பல்லவரையர் என்ற பட்டப்பெயரையும் கொண்டிருந்தனர். இக்கல்வெட்டுக் குறிப்பிடும் பல்லவரையனான மலையன் மான்வேலி என்ற ஊரின் தலைவனாவான். மான்வேலி என்ற ஊர் தற்போது எதுவெனத் தெரியவில்லை.

உதப்பிக்குட்டை என்பது நீர் ஊற்றெடுத்து ததும்பிவழியும் குட்டை என பொருள் கொள்ளலாம்.   உதப்புதல் என்றால் பேசும்போது எச்சில் தெரித்தலைக் குறிப்பதாகும்.   ஊத்தங்கரை வட்டம் கொண்டம்பட்டி என்ற ஊரில் உள்ள கி.பி.9ம் நூற்றாண்டைச் சேரந்த கல்வெட்டு ஒன்றில் உதப்பியூர் என்ற ஊர் குறிப்பிடப்படுகிறது.

https://youtu.be/yoAwSA89RSE

இந்த ஆய்வில் கோவிந்தசாமி ,விஜயகுமார் தமிழசெல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

அங்கனப்பற்று - மகராசகடை - பாறை ஓவியம் -பனரத்து பண்டா- - MAHARAJAKADI -PANAMARATHUPANDA PREHISTORIC ROCK ART ( PAINTING ) புதிய கண்டறிதல்

மேலும் சிறப்பு பெறும் மகராசகடை ( அங்கனப்பற்று )பகுதி - நடன பாறை ஓவியம் -மகராசகடை மலை அடிவாரப்பகுதியில் உள்ள பனமரத்துபண்டா என்ற இடத்தில் ...