கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு ஓசூர் சென்றபோது அறம் கிருஷ்ணன் அவர்கள் ஒரே இடத்தில் இரு கல்வெட்டுகள் மற்றும் 30 நடுகற்கள் உள்ளதாககூறி மஞ்சுநாத் என்பவரையும் உடன் அனுப்பினார் அவருக்கு நன்றி
1. கையில் வாள் ஏந்திய வீரன் பூசலில் இறந்ததன் நினைவாக வைக்கப்பட்ட நடுகல் . அவனின் இருமனைவிகளும் உடன்கட்டை ஏறி இறந்தது காட்டப்பட்டுள்ளது. இது சதிக்கல் ஆகும்
2. வீரன் பூசலில் இறந்ததன் நினைவாக வைக்கப்பட்ட நடுகல் . அவனின் இருமனைவிகளும் உடன்கட்டை ஏறி இறந்தது காட்டப்பட்டுள்ளது. இது சதிக்கல் ஆகும்
3. இந்த நடுகல்லில் இரு வீரர்கள் காட்டப்படடுள்ளனர் ஒருவன் வாள் ஏந்தியும் , ஒருவன் இரு கரம் கூப்பியும்உள்ளான். அவர்களின் இருமனைவிகளும் இரு கரம் கூப்பியும் உள்ளவாறு அமைக்கப்பட்டுள்ள நடுகல்லாகும்
4. ஒரு வாள் ஏந்திய வீரனும் அவன் இறந்த உடன் உடன்கட்டைஏறிய மனைவியும் காட்டப்பட்டுள்ள சதிக்கல் ஆகும்
5. ஒரு வாள் ஏந்திய வீரனும் அவன் இறந்த உடன் உடன்கட்டைஏறிய மனைவியும் காட்டப்பட்டுள்ள சதிக்கல் ஆகும்
6. ஒரு வாள் ஏந்திய வீரனும் அவன் இறந்த உடன் உடன்கட்டைஏறிய மனைவிகளும் உள்ளனர் ஒருவர் கைகூப்பி உள்ளது போல் அமைக்கப்படடுள்ளது.
No comments:
Post a Comment