கிருஷ்ணகிரியில் இருந்து மகாராஜகடை செல்லும் சாலையில் மேல்பட்டியை அடுத்த தர்மராஜ நகருக்கு மேற்கே ஒரு பாறையில் ஓவியங்கள் இருப்பதை கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுத்தலைவர் திரு நாராயண மூர்த்தி அவர்கள் தெரிவிக்க கிருஷ்ணகிரி அருங்காட்சியகமும் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து 19 5 2022 அன்று ஆய்வு செய்தனர். இதில் தலைவர் நாராயணமூர்த்தி ஒருங்கிபைப்பாளர் தமிழ்ச்செல்வன் மாருதி மனோகரன் விஜயகுமார் வரலாறு ஆசிரியர். எம்.என். ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.
இப்பாறை ஓவியங்கள் குறித்து அருங்காட்சியகக் காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது :இப்பாறை ஓவியத்தில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வெண்சாந்தினால் வரையப்பட்ட 50க்கும் மேற்பட்ட ஓவியங்கள் காணப்படுகின்றன. பாண்டில் விளக்கு, குறியீடுகள் மற்றும் மனித உருவங்கள் இவற்றுள் அடங்கும். குறியீடுகளில் வட்டத்துக்குள் கூட்டல் குறி அவற்றுக்கிடையே 4 புள்ளிகள், பெருக்கல் குறியின் இரண்டு முனைகளும் இணைந்த அமைப்பு, மற்றும் ஆறு முனையுடன் கூடிய நட்சத்திரம் வட்டம் பல கட்டங்களாக பிரிக்கப்பட்ட கோலம் போன்ற அமைப்பு போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும் வட்டத்துக்குள் மனிதன், சதுரத்துக்குள் மனிதன் என வரையப்பட்டுள்ளன. இவை இறந்த மனிதனை அடக்கம் செய்து இருப்பதை சுட்டிக்காட்டுகின்றன. மேலும் ஏழு எண்ணிக்கையில் இறந்தவர்களின் ஆன்மாவைக் குறிக்கும் பாண்டில் விளக்குகள் காட்டப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு அளவிலும் ஒவ்வொரு விதமாக அலங்கரிக்கப்படும் வெவ்வேறு கோணங்களில் வரையப்பட்டுள்ளன மொத்தத்தில் இவ்வோவியங்கள் இறந்தோரின் நினைவாக வரையப்பட்டுள்ளது என்பது உறுதியாகும். இக்குகைப் போன்ற அமைப்பிற்கு முன்னால் பரந்த வயல்வெளிகள் காணப்படுகின்றன அவ்விடங்களில் முன்பொரு காலத்தில் கல்திட்டைகள் இருந்திருக்க வேண்டும் அக்கல் திட்டைகளையும் இந்த ஓவியத்தில் காட்டியுள்ளனர். ஓவியங்கள் காணப்படும் கூரைக்கு கீழே உள்ள கல் பரப்பில் சுமார் 10 பேர் அமரும் வண்ணம் உள்ளது இங்கு தற்காலத்திய பெயர்கள் வெட்டப்பட்டுள்ளன. பாறை ஓவியங்கள் பெரும்பாலும் மலைக் குகைகளில் காணப்படும். இதுபோன்று ஒரு சில இடங்களில் மட்டும் தரைமட்ட பாறைகளில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன என்றார்
தமிழகத்தின் அபூர்வமான பெண் பலி கொடுக்கப்படும் நடுகல் கல்வெட்டு கண்டுபிடிப்பு
தியாகத்தின் மறு உருவம் பெண் என்பதற்கான ஆதாரம்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் அரசு அருங்காட்சியகமும் இணைந்து சின்ன கொத்தூரில் ஆய்வு மேற்கொண்டது. அங்கு சாக்கியம்மாள் கோயில் என்ற இடத்தில் மேற்கொண்ட ஆய்வில் அந்த கோவிலில் இருந்த உடைக்கப்பட்ட சாஸ்தாசிலையும் அருகே உள்ள இடங்களை ஆய்வு செய்தபோது மண்ணில் ஒரு நடுகல் புதைந்திருப்பதும் தெரியவந்து அந்த இடத்தினை ஊர்மக்கள் உதவியுடன் தோண்டி அந்த நடுகல் வெளியே எடுக்கப்பட்டது.
இது பற்றி அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறுகையில் இது நமது மாவட்டத்தில் கிடைத்த பெண்களுக்கான நடுகல்லில் மூன்றாவதாகும். அந்த நடுகல் 16 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. நடுகல்லின் உள்ள பெண் தோள்மாலையுடனும் பிற அணிகலன்களுடனும் ஒரு விரலை உயர்த்தி காட்டிய நிலையில் அமர்ந்திருப்பதை பார்க்கும் போது இந்தப் பெண்ணூக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் தெரிய வருகிறது.
,ப்பெண்ணை ஒரு ஆண் வீரன் வெட்டுகிறான். அவனும் போரிடும் நிலையில் இல்லை என்பது தோற்றத்தில் இருந்து தெரிய வருகிறது. நரபலி கொடுத்தபின் இவரை தெய்வமாக அந்த பகுதி மக்கள் வழிபட்டு இருக்கிறார்கள் என்பது இந்த நடுகல் அமைப்பில் இருந்து தெரிய வருகின்றது.
இதன் தொடர்ச்சியாக சிவன் கோவில் புரணமைப்பின் போது எடுக்கப்பட்ட ஒரு நடுகல் இதன் தோற்றத்தினை அப்படியே பெற்று இருந்ததுடன் அதில் கல்வெட்டும் காணப்பட்டது.
அதில்
1. தீத்தமலை உடநே தலை வெட்
2. டு
என்ற வாசகம் இடம்பெற்று இருக்கின்றது. தீர்த்தம் என்ற இடம் இந்த இடத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் சிவன்கோவில் உள்ள இடம் ஆகும் . எனவே ஒரு வேண்டுதலுக்காகவோ போருக்காகவோ வேறு முக்கிய நிகழ்வுக்காகவோ இவர் தானாக நரபலிக்கு முன் வந்திருப்பது அவர் இந்த நடுகல் மூலம் தெரிய வருகிறது.
சாக்கியம்மாள் என்று இவர்கள் பெயர்வைத்திருப்பது தெருகூத்தின் வழிவந்ததாக இருக்க கூடும் . ஆனால் இவருக்கு வேறு பெயர் இருந்திருக்கும் காலத்தின் மாற்றத்தில் இது செல்லியம்மன் என அழைக்கப்படுகிறது.
தன் தலையை தானே அறுத்து பலியிடும் நவகண்ட சிற்பத்திலிருந்து இது வேறுபட்டது. இது தமிழகத்தின் நடுகல் வரலாற்றில் ஒரு முக்கிய இடம் பெறும் என்பதில் ஐயமில்லை . ஆய்வுப்பணியில் தலைவர் நாராயணமூர்த்தி ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன், விஜயகுமார், ரவி, செல்வகுமார் ஊர்மக்கள் ஆகியோர் ஈடுபட்டனர்