தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Wednesday, 17 March 2021
Friday, 12 March 2021
கிருஷ்ணகிரி அருங்காட்சியகம் -75 வது சுதந்திர திருநாள் கொண்டாட்டங்கள் 75 வாரங்கள் துவக்கவிழா பேச்சுப்போட்டி
நிகழ்வில் வரவேற்பு உரை ஜி.அனுராதா மாவட்ட செயலர் மகளிர் வலையமைப்பு (தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி )வட்டாரக்கல்வி அலுவலர் திருமதி எ.மரியரோஸ் அவர்களின் சிறப்புரை
இந்திய சுதந்திர வரலாற்றில் மார்ச் 12. ஓர் முக்கியமான நாள் ஆம் நாம் தினமும் உணவில் பயன்படுத்தும் உப்பு - அதற்கும் நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாறுக்கும் முக்கியத் தொடர்பு உண்டு. காந்தி பிரிட்டிஷ் அரசு 1882-ல் பிறப்பித்த உப்புச் சட்டத்தை எதிர்த்துத் தீவிரமான போராட்டத்தை முன்னெடுத்தார். கடல்நீரை ஆவியாக்குவதன் மூலம் உப்பளங்களில் எளிதாக உப்பைத் தயாரிக்க முடியும். எனவே, கடற்கரைப் பகுதிகளில் வசித்த பல இந்தியர்கள் உப்பு உற்பத்தியிலும் விற்பனைத் தொழிலிலும் தொன்றுதொட்டு ஈடுபட்டுவருகின்றனர். இந்தியர்கள் உப்பு உற்பத்தி, விற்பனை செய்வதை பிரிட்டிஷ் அரசு குற்றமாக்கியது. இந்திய மக்கள் மிக அதிக விலை கொடுத்து பிரிட்டிஷாரிடமிருந்து உப்பை வாங்கும் நிர்ப்பந்தத்தை இந்தச் சட்டம் ஏற்படுத்தியது.எனவே, அச்சட்டத்தை எதிர்த்து 1930 மார்ச் 12 அன்று தனது ஆதரவாளர்கள் 78 பேருடன் சபர்மதி ஆசிரமத்திலிருந்து குஜராத்தின் சிறிய கடற்கரை கிராமமான தண்டிக்கு அவர் நடைபயணம் புறப்பட்டார். ‘உப்பு சத்தியாகிரகம்’ என்றும் ‘தண்டி யாத்திரை’ என்றழைக்கப்படும் அந்த 384 கிலோ மீட்டர் நடைபயணத்தில், பலர் இணைந்துகொண்டனர்.80000 . கைது செய்யப்பட்டனர் இது இலட்சக்கணக்கான இந்தியர்களை ஆங்கிலேய ஆட்சிக்கெதிராகப் போராடத் தூண்டியதுபேர் இதுவே சுதந்திரத்துக்கு அடிப்படையானது எனவே இந்த முக்கியத்துவம் வாய்ந்து இந்த நாளில் 75வது சுதந்திர தினவிழா நிறைவை கொண்டாடும் வகையில் 75 வர கொண்டாட்டமாக கொண்டாட இந்திய அரசின் முடிவை ஏற்று கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்தில் இந்த கொண்டாட்ட நிகழ்வை தொடங்குவதில் மகிழ்வடைகிறோம்

அருங்காட்சியம் பற்றி காப்பாச்சியர் கோவிந்தராஜ் அவர்கள்
மாணவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்வு
தினமணிதினகரன்
இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் 75 வாரம் கொண்டாடும் இந்திய அரசின் ஆணைக்கினங்க கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்தில் இந்த கொண்டாட்ட நிகழ்வை தொடங்கும் முகமாக பள்ளி மாணவர்களுக்கான சுதந்திர போராட்ட வீரர்கள் என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. இந்திய சுதந்திர வரலாற்றில் மார்ச் 12ஆன இந்தநாள் ஓர் முக்கியமான நாள். நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாறுக்கும் முக்கியத் தொடர்பு உண்டு. காந்தி பிரிட்டிஷ் அரசு 1882-ல் பிறப்பித்த உப்புச் சட்டத்தை எதிர்த்துத் தீவிரமான போராட்டத்தை முன்னெடுத்தார். இந்தியர்கள் உப்பு உற்பத்தி, விற்பனை செய்வதை பிரிட்டிஷ் அரசு குற்றமாக்கியது. எனவே, அச்சட்டத்தை எதிர்த்து 1930 மார்ச் 12 அன்று தனது ஆதரவாளர்கள் 78 பேருடன் சபர்மதி ஆசிரமத்திலிருந்து குஜராத்தின் சிறிய கடற்கரை கிராமமான தண்டிக்கு அவர் நடைபயணம் புறப்பட்டார். ‘உப்பு சத்தியாகிரகம்’ என்றும் ‘தண்டி யாத்திரை’ என்றழைக்கப்படும் அந்த 384 கிலோ மீட்டர் நடைபயணத்தில், பலர் இணைந்துகொண்டனர்.80000 . கைது செய்யப்பட்டனர் இது இலட்சக்கணக்கான இந்தியர்களை ஆங்கிலேய ஆட்சிக்கெதிராகப் போராடத் தூண்டியது. இதுவே சுதந்திரத்துக்கு அடிப்படையானது எனவே இந்த முக்கியத்துவம் வாய்ந்து இந்த நாளில் 75ஆவது சுதந்திர தின கொண்டங்களின் தொடக்க நிகழ்ச்சியாக இந்நிகழ்வு அமைந்துள்ளது. அருங்காட்சியகக் காப்பாட்சியர் கோவிந்தராஜ், பணியாளர்கள் செல்வகுமார், பெருமாள், வட்டார கல்வி அலுவலர் திருமதி மரியரோஸ், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுத் தலைவர் நாராயணமூர்த்தி ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன் உறுப்பினர் மாருதி மனோகரன், மத்திய கல்வெட்டு ஆய்வாளர் நாகராஜன் மகளிர் வலையமைப்பு மாவட்ட செயலாளர் அனுராதா, ரோஸ்லின் மேரி, நிர்மலா ஆகியோர் பங்கேற்றனர்.
Subscribe to:
Comments (Atom)
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
இது சாக்கியமாள் என்று இன்றும் வழிபாட்டில் இருக்கும் ஒரு பெண்ணுக்கான நடுகல் இதில் ஒரு கையை உயர்த்தி ஒரு விரலை காட்டும் வகையிலும் ,தோள்மாலை இ...
-
1978 தமிழக்த்தில் கண்டறியப்பட்ட முதல் #பாறைஓவியம் 2000 ஆண்டுகளுக்கும் முற்பட்டது #மல்லப்பாடி . இது தமிழகத்தில் பாறை ஓவியத்தேடலை அதி...



































































