வரலாறு புனையப்ட்ட தாக என இருக்குமோ என்ற ஐயப்பாட்டை கல்வெட்டுகள்தான் தகற்த்தெரிகின்றன.அந்த வகையில் கிருஷ்ணகிரி மவட்டம் ஊத்தங்கரை வட்டம் நடுபட்டிஊராட்சி எட்டிப்பட்டி தென்பெண்ணை ஆற்றங்கரையில் எட்டிப்பட்டி பெருமாள் , வேங்கன் கூறியதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆய்வுப்படுத்தும் குழு தலைவர் நாராயனமூர்த்தி தலைமையில் ஆய்வு மேற்கொண்டது.
எறக்குறைய 300 ஆண்டுகள் பழமையான அக் கல்வெட்டு தென்பெண்ணை ஆற்றில் நீர் ஓடும் பகுதியிலேயே அமைந்துள்ளது 10 அடி உயரம் கொண்ட இக்கல்லை அங்கு உள்ளவர்கள் சாசனக்கல் என்று அழைத்து வருகின்றனர். ஆற்றின் ஓட்டத்தால் மிகவவும் சேதமடைந்துள்ளது .இக்கல் இந்த சாசனக்கல்லை அருங்காட்சியக காப்பாச்சியர் கோவிந்த ராஜ் , தொல்லியல் ஆய்வாளர் சுகவனமுருகன் ஆகியோர் படிஎடுத்தனர். .
இதுபற்றி கோவிந்தராஜ் அவர்கள் கூறும்போது ஆச்சாரி என்ற இனத்தைச் சேர்ந்த ஊத்தங்கரை பிரிவை சேர்ந்தவர்களுக்கும் பாவக்கல் பகுதியை சேர்ந்தவர்களுக்கும் 60 பங்கு தானத்தை சரி சமமாக பிரித்து கொடுத்ததை இக்கல்வெட்டு காட்டுகிறது. இக்கல் ஆற்றின் நீர் ஓட்டத்திலேயே இருந்ததால் மிகவும் தேய்மானம் அடைந்துள்ளது.
இது துன்மதி வருவம் மார்கழி 17 ஆம் தேதி ஐந்து சாதி பஞ்சமுகத்தார் கூடி பேசி முடிவெடுத்தது பற்றி தெரியவருகிறது. 1.துன்மதி வருஷம் மார்கழி 17 ந்தேதியில் அதற்கு அஞ்சு சாதி-யைச் சேர்ந்த ஊர் முக்கியஸ்தர்களான
குப்பாசாரி ,தருமாசாரி, மல்லிகாச்சாரி, திம்மாச்சாரி, ராமாச்சாரி, தச்சு வடராமாசாரி ,ருத்ரா சாரி, தச்சர் தண்டியாசாரி , திருகடையன் .
கோவிந்தாசாரி திம்சாரியும் பெருமாளாச்சாரி. ஆகியோர் முன்னிலையில் நடத்த கூட்டடம் பற்றியது.
கடும் வெயிலில் இரண்டுமணிநேரம் இருந்ததன் விளைவு அருகே உள்ள மரத்தடியில் சிறிது ஓய்வு
1.துன்மதி வருஷம் மார்கழி 17 ந்தேதியில் அதற்கு அஞ்சு சாதி
2.பஞ்ச முத்ததாரும் மா நி
யம் குப்பா சாரி திருமானூர் வேடர்ப்பட்டி
3........ பாவக்கல் தருமாசாரி,
மல்லிகாச்சாரி, திம்மாச்சாரி மூத்த
4.ரும் ராமாச்சாரி தச்சு வடராமாசாரி
..... லக்கம் பட்டணம்
5 ருத்ரா சாரி தச்சர் தண்டியாசாரி
6. யத்து மலையன்அஞ்சு கிவர்ம குலத்தாரும்
திரு கடையன்
8. சாரியும் பெருமாளாச்சாரி திம்மா சாரி
9. பட்டிண .ல்... விட்ட யாரும் இ..ல் விட்ட தோ ..இத். தருமம் பண்ணி கொடு
11. 60 இது வி னா ச சந்திராதித்தவரையில்
12. வெங்களபட்டி விட்டான் தானம் விட்டதன்ம்ம்
13. இத் தன்மத்துக்கு பாவம் கொண்டவர் ஆவார்.
இதில் குறிப்பிடும் ஜந்து சாதி என்பது
கொல்லர் - இரும்பு சம்பந்தமான வேலை செய்வர்.
தட்டார் - தங்கம் சம்பந்தமான வேலை செய்வர்.
கண்ணார் - பித்தளை சம்பந்தமான வேலை செய்வர்.
கச்சிப்பர்(சிற்பி - சிற்பம் சம்பந்தமான வேலை செய்வர்.
தச்சர் - மரத்தளவாடங்கள் சம்பந்தமான வேலைசெய்வர்.
15 வரிகள் கொண்ட இக்கல்லில் வேடர்பட்டி. , பாவக்கல், ஊத்தங்கரை ,எட்டிப்பட்டி என்ற தற்போது உள்ள ஊரின் பெயர்கள் வருகின்றன .லக்கம்படடி என்பரு லக்கம்பட்டிணம் என கல்வெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது ஆதலால் 300 ஆண்டுகளுக்கு முன் லக்கம்பட்டியினுடைய பெயர் லக்கம்பட்டிணம் என்று பெரிய ஊராக இருந்திருக்கலாம். அதேப்போல் திருமானுர் என்ற ஊரின் பெயர் மருவி திருவனபட்டி என்றும். வெங்களபட்டி என்ற ஊரின் பெயர் மருவி வேங்கடத்தாம்பட்டி என்றும் மாறியிருக்க வாய்ப்பு உண்டு. ஒருங்கிணைப்பாளர் தமிழ் செல்வன் கூறினார். இந்த ஆய்வுப்பணியில் விஜயகுமார் , பிரகாஷ் ஊரைச்சேர்ந்த பெருமாள் .வேங்கன் -
சங்கர் அப்துல்லா ஆகியோர் பங்கேற்றனர்
வெயில் தாங்கமுடியாமலும் நிழலில் தான் எழுத்து தெரிவதாலும் இப்படி ஒரு தற்காலிக கூடாரம்
எங்களால் இயன்றது . நன்றி
தலைவர் - நாராயணமூர்த்தி- 9442276076
செயலர் டேவீஸ்
-9487723678
பொருளர் விஜயகுமார்
--9488830969
ஒருங்கிணைப்பாளர்
தமிழ்செல்வன்
-9787536970
தங்கள் பகுதியில் ஏதாவது கல்வெட்டுகள் மற்றும் நடுகற்கள் பழைமையான கோவில்கள் இருப்பின் எங்களுக்கு தெவியுங்கள் நம் கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுக்க வசதியாக இருக்கும்.
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும்
ஆவணப்படுத்தும் குழு