கிருஷ்ணகிரி
மாவட்டம் குந்தப்பள்ளி என்ற கிராமத்தில் ராமன் என்பவரது வயலில் சுமார் 900 ஆண்டுகள்
பழமையான சோழர் கால நடுகல் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. அறிஞர் அணணா கலை மற்றும்
அறிவியல் கல்லூரி வரலாற்றுத் துறை மாணவர்கள் மற்றும் அத்துறை பேராசிரியர் வாசுகி
ஆகியோர் அளித்த தகவலின்பேரில் கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் கோவிந்தராஜ்
மற்றும் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினருடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இரண்டாக
உடைந்துக் காணப்படும் இந்நடுகல்லில் புலியைக் குத்தி வீரன் ஒருவன் இறந்த செய்தி
மற்றும் இரண்டு காளைமாடுகள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு அதில் ஒன்று இறந்த செய்தி
ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. கல்வெட்டு வாசகம்:
1.ஶ்ரீ ராஜேந்திர தேவற்கு
யாண்டு இரண்டாவது வி
2. ரியூர் நாட்டு
நாட்டு காமுண்ட நித்
3. தவிநோதக
கங்கனடியாந் கடிக
4. ாசிங்கன் தம்பி
பல புலி குத்திப
5. ட்டாந் இஷபம் தம்மில் விட்ட
6. து கொண்டு
குத்தி ஒன்
7. று களத்தில்
பட்டது.
இக்கல்வெட்டு
இரண்டாம் ராஜேந்திரனின் இரண்டாம் ஆட்சியாண்டான கி.பி.1053ம் ஆண்டினைச்
சேர்ந்ததாகும். இப்பகுதி அக்காலத்தில் விரியூர் நாடு என்று அழைக்கப்பட்டது. மேலும்
இப்பகுதியின் தலைவனாக நித்தவிநோதக கங்கன் என்பவன் இருந்துள்ளான். இவனுக்குக் கீழ்
இருந்த கடிகாசிங்கன் என்பவனின் தம்பி பல புலிகளைக் கொன்று இறுதியில் ஒரு புலி
தாக்கி இறந்துள்ளான். மேலும் இரண்டு காளைமாடுகள் ஒன்றோடொன்று மோதி இறுதியில்
அவற்றிலொன்று இறந்துள்ளது. இநத இரண்டு நிகழ்வுகளிலும் உயிரிழந்த வீரன் மற்றும்
காளைக்கும் சேர்த்து இந்த நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. இடப்பக்கம் இறந்த வீரன்
புலியைக் குத்தும் காட்சியும் வலப்பக்கம் இரண்டு காளைமாடுகள் ஒன்றோடொன்று
ஆக்ரோஷமாக தலைகளை முட்டிக்கொள்ளும் காட்சியும் மிக நேர்த்தியாக
செதுக்கப்பட்டுள்ளது. வீரனுக்கு எடுப்பதைப் போன்றே சண்டையிட்டு இறந்த காளைக்கும் சிறப்பு
செய்யும் வகையில் இங்கு நடுகல் எடுத்திருப்பது சிறப்பாகும்

இந்த ஆய்வில்
காப்பாச்சியாளர் கோவிந்த ராஜ். பேராசிரியர் வாசுகி. விஜயகுமார். எம்.என் .ரவி.
தமிழ்ச்செல்வன் . மதிவாணன். காவேரி டேவீஸ் ஆகியோர் ஈடுபட்டனர்youtube link
https://www.youtube.com/watch?v=Ej8kQUw0HGI
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2018/oct/24/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3025833.html
https://www.dailythanthi.com/News/Districts/2018/10/24032526/The-900yearold-Chola-periodic-inscription-in-Kundapalli.vpf
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=445282
https://www.dailythanthi.com/News/Districts/2018/10/24032526/The-900yearold-Chola-periodic-inscription-in-Kundapalli.vpf
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=445282